
மட்டக்களப்பில் அந்தரங்க புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும், மட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணம் முடித்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர், பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றும் போது, அங்கு முறைப்பாடு ஒன்று செய்ய சென்ற பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்தி, குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்
குறித்த பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ளவர்கள், இவ்விடயத்தை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து, அவர் பாணமை பொலிஸ் நிலையத்துக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டார்
அதனை தொடரந்து அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டு, மட்டக்களப்பில் கடமை புரிந்துவந்துள்ள நிலையில், பொத்துவில் பிரதேசத்துக்கு சென்று மீண்டும் குறித்த பெண்ணுடன் உறவை தொடர்ந்து வந்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை முகநாலில் பதிவிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பொத்துவில் பொலிஸ் நிலையத்துக்கு இன்று வரவழைத்து, அங்கு வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்தவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தவிட்டார்.
மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
