மட்டக்களப்பிலிருந்து வேலைக்காக யாழ்ப்பாணம் சென்றவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பன் கோகிலவாசன் (வயது – 59) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மேசன் வேலை நிமித்தம் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை 11.00 மணியளவில் திடீரென மயக்கமுற்றார். இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது.

இருப்பினும் அங்கு வந்த நோயாளர் காவு வண்டி அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதால் திரும்பி சென்றது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24