மட்டக்களப்பிற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்புக்கும் கொழும்பிற்கும் இடையிலான புகையிரத சேவைகள் இன்று சனிக்கிழமை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக, இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

காட்டு யானைகள் கூட்டம் எண்ணை கொள்கலன் புகையிரத் மோதியதால் ஏற்பட்ட விபத்து காரணமாக, சேதமடைந்த புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம், காட்டு யானைக் கூட்டம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தால் புகையிரதப் பாதை பாரிய சேதமடைந்ததுடன், எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்ட நிலையிதடம்புரண்ட நிலையில் இரண்டு காட்டு யானைகளும் பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.