மடகஸ்காரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு
மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 8 இலங்கை மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ரூட் பாபா 06 எனும் நீண்டநாள் மீன்பிடி படகு 8 மீனவர்களுடன் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி வென்னப்புவயிலிருந்து புறப்பட்டது.
கடல் எல்லைகளை மீறியதற்காக கடந்த மாதம் 2 ஆம் திகதி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீனவர்களை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது .