மசாஜ் நிலையத்துக்குச் சென்றவர் மரணம்

தெஹிவளை மசாஜ் நிலையத்தில் சேவை பெற வந்தவர் திடீர் சுகவீனம் காரணமாக மசாஜ் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த அரவல (வயது – 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்இ இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.