மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவியின் வாயை கத்தியால் குத்தி கிழித்த கணவன்!
ஹோமாக பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் செல்வதாக கூறி மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொட்டாவ ருக்மல்கம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.
இந்த பெண் தனது முதல் கணவரை கைவிட்டு சந்தேக நபருடன் வாழ்ந்து வந்துள்ளார். குறித்த நபரும் தனது மனைவியை கைவிட்டுள்ளார். இருவருக்கும் 5 வயதில் பிள்ளை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் வறுமை காரணமாக குறித்த பெண் கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் உள்ள ஆடை நிறுவனமொன்றில் பணிபுரியச் சென்றுள்ளார்.
ஆனால் குறித்த பெண் வேலைக்கு செல்லும் நேரம் மற்றும் செயற்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மசாஜ் நிலையத்தில் சேவை வழங்கப் போவது தெரிய வந்த நிலையில் மனைவியின் வாயிலும், உடலிலும் கூரிய ஆயுதத்தால் பல இடங்களில் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அந்த நபர் தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் படுகாயமடைந்த பெண்ணை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பேச முடியாத அளவுக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்