
மசாஜ் செய்த பின் வாடிக்கையாளரிடம் அத்துமீறிய நிபுணர்!
கனடாவின் டொரோண்டோவில் ஒரு பெண்ணுக்கு மசாஜ் செய்த பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அந்நாட்டுக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த நபர் டொரோண்டோ மற்றும் மார்கம் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் பதிவு செய்யப்படாத மசாஜ் நிபுணர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தில் பதிவு செய்யப்படாத நபர்கள் “மசாஜ் நிபுணர்கள்” என்று தங்களை அழைப்பதற்கும், தொழில்முறை மசாஜ் சேவைகள் வழங்குவதற்கும் அனுமதி இல்லை.
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
