
மசகு எண்ணெய் விலையில் மாற்றம்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் தாக்கம் செலுத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் திங்கட்கிழமை ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.21 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்து வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் பொழுது, 0.3 வீத வீழ்ச்சி ஆகும். அத்துடன், டப்ளியூ.டி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.41 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
