மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்க நடவடிக்கை

இன்று வியாழக்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் விவசாயிகளிடம் இருந்து அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சந்தைப்படுத்தல் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டு அரிசி 120 ரூபாவிற்கும், சம்பா அரிசி 125 ரூபாவிற்கும், கீரி சம்பா அரிசி 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், புதிய பருவத்தில் நெல் கொள்முதல் பணிகளை அரசு தொடங்க உள்ள பின்னணியில் அரசு அறிவித்துள்ள உத்தரவாத விலை கட்டுப்படியாகாது, என விவசாயிகள் அமைப்புகள் தெரிவிக்கின்ற

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் பெறப்பட்ட 21,000 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிச் செல்லும் கப்பல் இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யப்படும் என்றார்.

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் பெறப்பட்ட 44,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தின் முதலாவது கையிருப்பு கடந்த ஜூலை மாதம் நாட்டை வந்தடைந்தது.

மேலும், வரும் பருவத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்க ஒன்லைன் மூலமாக பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடிக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 50 கிலோ யூரியா மூட்டை பத்தாயிரம் ரூபாய் விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது, அதே தொகைக்கு மக்காச்சோள விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்பட உள்ளது.