
மக்கள் வங்கி கடன்கள் 54,000 கோடி ரூபா நிலுவையில்
மக்கள் வங்கியினால் அறவிடப்படாமல் நிலுவையில் இருக்கும் கடன்களின் தொகை 54,000 கோடி ரூபா, என பாராளுமன்ற பொது நிறுவன குழு(கோப்) தலைவர் கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலத்திற்குள், இந்த கடன்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்பது தொடர்பிலும், இந்த கடன்களை வழங்கும் அனுமதியில் யாருடைய தலையீடுகள் உள்ளன என்பது தொடர்பிலும், விபரங்கள் வழங்கப்பட வேண்டுமென, கோப் தலைவர், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
2018, 2019 மற்றும் தற்போதைய மக்கள் வங்கியின் நிலமை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இலங்கை கடன்களை தீர்க்க கூடிய இந்த பாரிய தொகை கடன்கள் செலுத்தப்படாத நிலையில் அல்லது நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையிலேயே, பாராளுமன்றத்தில் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
