மக்கள் மதம், இனம் அல்லது குலத்தின் அடிப்படையில் வாக்களிக்கத் தயாராக இல்லை
மதம், இனம் அல்லது குலத்தின் அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தியதாக பௌத்த விவகார இணைப்பாளர் வண. கலாநிதி சஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர் தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் இனவாதம், மத பிளவுகள், தொடர்ச்சியான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார்.
“தற்போது, நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் மோசமடைந்து வருகின்றன. எனவே, மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை முயற்சியின் ஒரு பகுதியாக மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு சங்கம் முடிவு செய்துள்ளது,” என்று தேரர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்