மக்கள் பங்கேற்புடனான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பட்ஜட் தயாரிப்பு தொடர்பான கலந்துரையாடல்
-கிண்ணியா நிருபர்-
மக்கள் பங்கேற்புடனான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை தம்பலகாமம் பிரதேச சபையில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் தம்பலகாமம் பிரதேச சபையின் பாதீடு தயாரிப்பில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வகையில் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள சமுதாயம் சார் நிறுவனங்களான கிராம மற்றும் பெண்கள் அபிவிருத்தி சங்கம், மாற்றுத் திறனாளிகள் சங்கம் உட்பட பல சங்கங்களின் பிரதிநிதிகள் இதன் போது பங்கேற்றதுடன் வெளிப்படை தன்மையுடன் கூடிய பாதீடு தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
எதிர் வரும் காலங்களில் பிரதேச சபை மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் திறம்பட கூடிய வகையில் செயற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக காணப்படுகிறது.
ஊழல் மோசடியற்ற அபிவிருத்தியினை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக இக் கலந்துரையாடல் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் உப தவிசாளர் வி.விஜய குமார் , செயலாளர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


