மக்களுக்கு செலவினம் அதிகரித்துள்ளதே தவிர வருமானம் அதிகரிக்கவில்லை

தமது அரசாங்கத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இன்று வெள்ளிக்கிழமை காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆசி வழங்கும் நிகழ்வில் பெருமளவிலான பிக்குகள் பங்கேற்றிருந்தனர்.
இதனையடுத்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களினது மகாநாயக்க தேரர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆசிப்பெற்றார்.
அதன் பின்னர் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், நாம் இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஆற்றிய சேவைகள் குறித்து இன்று மகாநாயக்க தேரர்களுக்கு அறிவித்ததாக குறிப்பிட்டார்.
மக்களுக்கு தற்போது செலவினம் அதிகரித்துள்ளதே, தவிர வருமானம் அதிகரிக்கவில்லை, அதனை தமது அரசாங்கத்தில் மாற்றியமைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்