
மகிந்த ராஜபக்சவின் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ள நாய்க்குட்டிகள்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கார்ல்டன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த மூன்று நாய்க்குட்டிகள் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளருமான ஒருவருடைய வீடொன்றில் இருந்து காணாமல் போன லாப்ரடோர் நாய்க்குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது 21 வயது மகள் சந்தேகத்தின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட யுவதி கடந்த 9 ஆம் திகதி நாய்க்குட்டியை அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
