
மகா சிவராத்திரி “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது – ஜனாதிபதி
மகா சிவராத்திரி “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது – ஜனாதிபதி
மகா சிவராத்திரி விரதம் உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்வதைக் குறிக்கிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் தெரிவித்தள்ளார்.
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானைப் பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது.
மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.
‘பல யுகங்களாக எம்மை சகோதரத்துவத்திலிருந்து ஒதுக்கி வைத்த பிரிவு பிளவுகளை உருவாக்கிய இருள் திரையைக் கிழித்து, ஒற்றுமையைக் கட்டியெழுப்பி இந்த பூமியில் ஒரு புதிய யுகத்தின் உதயத்தைக் காணும்தருணம் வந்திருக்கிறது” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வலுவான களத்திலிருந்து சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக்கொள்ள ஒரே தேசமாக நாம் அனைவரும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.