மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள்

 

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-

இன்று ஜனவரி 30 மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள்

அவரது படுகொலையின் பின்னால் நின்று செயற்பட்ட இந்துத்துவ சக்திகளே இன்று இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்தன

ராமராஜ்ஜியத்தை கட்டியெழுப்பப் போவதாக கூறிக் கொள்ளும் இந்துத்துவ வெறியர்களின் முக்கியஸ்தர் நாதுராம் விநாயக் கோட்சேவின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காந்தி ஹே ராம் என்ற முழக்கத்துடன் உயிர் நீத்தார்.

ரகுபதி ராகவ ராஜாராம் என்று காந்தி நம்பிய கொள்கைகளின் அடிப்படையில் காந்தியின் நினைவு தினத்திலும் ராமர் இன்று நினைவு கூரப்படுவார். ஆனால் ராமரின் பக்தர்கள் தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதே துரதிருஷ்டவசமான உண்மை.

ராமர் மீதான பக்திக்கும் ராமரின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மதவெறிக்கும் இடையிலான மிக நுண்ணிய வேறுபாடு காந்தியும் இந்துத்துவாவும் என்றால் அது மிகையல்ல.