மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தை கைது
மஸ்கெலியா பகுதியில் தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி , விசம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா மொக்கா தோட்டப்பகுதியில் தந்தையின் துன்புறுத்தலுக்கு உள்ளான 20 வயதான யுவதியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது , அவர் பல நாட்களாக பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து யுவதியின் தந்தை மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மூன்று பெண் பிள்ளைகளும் பாதுகாப்பு நிமித்தம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
யுவதியின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தந்தையின் பாதுகாப்பில் மூன்று பெண் பிள்ளைகளையும் விட்டு விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் பேரில் கைது செய்யப்பட்ட தந்தையை இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இவரை எதிர் வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
