மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை தன்னுயிரை மாய்தார்

அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார்.

அம்பாறை – பன்னலகம 2 சீ, குமண பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் மனைவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாட்டுக்கு வீட்டுப்பணி பெண்ணாகச் சென்றுள்ளார். இந்நிலையிலேயே, தனது மகளை தந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

தனக்கு நேர்ந்த அநீதி தொடர்பில், தாயின் கவனத்துக்கு மகள் கொண்டுவந்ததையடுத்து இது தொடர்பில் வெளியே சொன்னால், இரண்டு பிள்ளைகளுடன் தானும் தன்னுயிரை மாய்த்துக்​கொள்வேன் என மனைவியை கணவன் மிரட்டியுள்ளார்.

எனினும், சம்பவம் தொடர்பில் தமண பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததை அடுத்து, சந்தேநபரை கைது செய்வதற்கு அவருடைய வீட்டுக்கு பொலிஸார் சென்றுள்ளனர். விடயத்தை அறிந்துகொண்ட சந்தேநபர், வீட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்