மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டி குவஹத்தியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், முதலாவது போட்டியில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளன.

முன்னதாக இடம்பெற்ற மகளிர் உலக கிண்ணப் போட்டிகளில் இலங்கை அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை.

இதேவேளை, 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் குறித்த போட்டி இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.