மகளிர் உலகக்கிண்ண தொடருக்கான பரிசுத்தொகை அறிவிப்பு!

எதிர்வரும் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை 13.88 மில்லியன் அமெரிக்க தொடராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற முந்தைய ஒருநாள் உலகக் கிண்ண தொடரை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 4.48 மில்லியன் அமெரிக்க டொலரும், இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டொலரும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 1.12 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.