
மகளின் 16 வயது காதலன் மீது தாக்குதல்: தந்தை கைது
களுத்துறையில் மாணவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரொன்துடுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
சந்தேக நபரின் மகள் குறித்த மாணவனின் பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் இருவரும் காதல் தொடர்பை பேணியுள்ளனர். இது தொடர்பில் அறிந்து கொண்ட சந்தேக நபர்இ குறித்த மாணவன் பாடசாலை முடிவடைந்து வீடு சென்று கொண்டிருந்தபோது மாணவனைத் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மாணவனின் கை இகால் மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதன் போது மொரொன்துடுவை பகுதியை சேர்ந்த கலபுகம மல்லியா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
