
மகளின் தலையில் சிசிரிவி: 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தை
பாகிஸ்தானில் தனது மகளின் பாதுகாப்பிற்காக அவரின் தலையில் தந்தை ஒருவர் சி.சி.ரி.வி கேமரா பொருத்தியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
24×7 என்ற அடிப்படையில் அந்தப் பெண்ணின் தலையில் 360 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் சி.சி.ரி.வி கேமரா ஒன்றினையே அவர் இவ்வாறு பொருத்தியுள்ளார்.
தனக்கு எந்த விதத்திலும் ஆபத்து நெருங்கி விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான ஒரு செயலைத் தனது தந்தை செய்துள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தை எது செய்தாலும் அதை முழு மனதுடன் ஏற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
