
மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை!
பதுளை – மஹியங்கனை, யல்வெல பிரதேசத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், தந்தை ஒருவர் தனது மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை , ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய காதலனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைசெய்யப்பட்டவர் சந்தேக நபரின் மகளுடன் நீண்ட நாட்களாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட சந்தேக நபரான தந்தை தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரின் மகள் தனது காதல் உறவை முறித்துக்கொண்டு வேலை நிமித்தம் கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த காதலன் நேற்று சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று சந்தேக நபரை பொல்லால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த சந்தேக நபரான தந்தை, மகளின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து 57 வயதுடைய சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
