மகளின் காணொளியை அனுப்பிய தந்தை கைது
தலவாக்கலையில் 5 வயதுடைய மகளை கொடுமை படுத்திய தந்தை தெனியாய பொலிஸாரால் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .
பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேக நபரின் இரண்டாவது மனைவியின் மகள் எனவும் வெளிநாட்டில் உள்ள தனது மனைவி அனுப்பும் பணம் போதாது எனவும் மனைவியின் பெற்றோருக்கு வழங்கும் பணமும் தனக்கே தர வேண்டும் என கூறியும் குறித்த நபர் சிறுமியின் தலைமுடியைப் பிடித்து அவரை தாக்கியது காணொளியாக பதிவு செய்து வெளிநாட்டில் பணிபுரியும் மனைவிக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .
தனது மகள் தாக்கப்படும் காணொளியை பார்த்த பெண் இது தொடர்பில் நாகொட பிரதேசத்தை சேர்ந்த தனது தாயாருக்கு தகவல் வழங்கி , தெனியாய பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெனியாய பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன அமரரத்ன தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
