
மகளின் ஆண் நண்பருடன் காதலில் விழுந்த தாய்
அமெரிக்காவில் இளம்பெண் ஒருtu; இளைஞருடன் ஐந்தாண்டுகளாக நெருக்கமான பெஸ்ட் பிரெண்டாக இருந்து வந்துள்ளார். இருவரும் உயர் கல்வியை ஒன்றாக பயின்று வந்துள்ளனர். இந்த இந்த இருவரின் நட்பு பெண்ணின் தாய்க்கும் தெரியும்.
அந்த இளம்பெண்ணின் தாயார் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கோவிட்-19 லாக்டவுன் காலத்தில் அந்த இளைஞரின் அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்யுமாறு கூறவே, வசிப்பிடம் இன்றி அவர் தவித்துள்ளார்.
எனவேஇ அந்த இளம்பெண் தங்கள் வீட்டில் தங்கிக்கொள்ளமாறு கூறியுள்ளார். பெண்ணின் தாயாரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த இளைஞர், இளம்பெண்ணின் வீட்டிலேயே குடியேறியுள்ளார். இளம்பெண்ணுக்கு வேலை கிடைத்து அவர் நைட் ஷிப்ட் பார்த்து வந்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் இளம்பெண்ணின் தாயாருக்கும் பெண்ணின் நெருங்கிய நண்பரான இளைஞருக்கும் காதல் உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவு பல மாதங்களாக நீடித்து திருமணம் என்ற நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனால், இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு கடைசி வரை தெரியவரவில்லை.
ஒரு நாள் பெண்ணின் தாயார் நான் உனது பெஸ்ட் பிரெண்டை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், இதோ திருமண நிச்சய மோதிரத்தை பார் என்ற காட்டவே, அந்த பெண்ணுக்கு ஆச்சிரியம் மட்டுமல்லாது ஒரு கணம் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தாய் சொன்னதை கேட்டு பெரும் வருத்தம் கொண்ட தற்போது பெண் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளார்.
43 வயதான தனது தாயார்இ தன்னுடன் கல்லூரியில் படித்த நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்வது மோசமான உணர்வை தருவதாக அந்த பெண் தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
