
மகனை கொலை செய்த தந்தை
காலி கொஸ்கொட இந்துருவ பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.
21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தந்தை மற்றும் மகனுக்கிடையில் நேற்று திங்கட்கிழமை வாய்த்தர்க்கம் அதிகரித்த நிலையில் தந்தை கத்தியால் மகனின் கழுத்தில் குத்தியதை தொடர்ந்து மகன் மயக்கமுற்ற நிலையில் கீழே விழுந்துள்ளார்.
பலத்த காயத்துடன் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்ட மகனை பலபிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற வழியில் மரணித்துள்ளார்.
சந்தேக நபரான 65 வயது தந்தையை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
