மகனை ஆற்றில் தள்ளிவிட்டு தானும் உயிரை மாய்க்க முயன்ற தாய் கைது

ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, தானும் ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற பெண்ணொருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் நேற்று இரவு 7.30 அளவில் தனது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, வீதியால் பயணித்த நபரொருவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அவர் ஹெந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க கடற்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.