மகனின் தகாத காதல் உறவினால் பொலிஸ் அதிகாரியான தந்தை மீது தாக்குதல்

மகனின் காதலியுடைய உறவினர்களால் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன்ட் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை தெற்கு காவல்துறை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மகன் ஆசிரியராக பணிபுரிகிறார்.

திருமணமான அவர் வேறு பெண்ணுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவினை பேணிவந்துள்ளார்.

அது தொடர்பில் ஏற்பட்ட தகராறையடுத்து,  பொலிஸ் சார்ஜன்ட் வீட்டுக்கு சென்ற சிலர், இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்