
மகனின் உணவுப் பெட்டியில் உணவுடன் சேர்த்து துப்பாக்கி கொடுத்த தந்தை
தந்தை ஒருவரால் தனது மகனுக்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பெட்டியில், உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப்பாக்கியும் வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
மாணவன், வழக்கம்போல மதிய உணவுக்காக தனது உணவு பெட்டியை திறந்தபோது, அதில் இருந்து ஒரு துப்பாக்கி வெளிப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
விசாரணையின் பின்னர் குறித்த மாணவனின் பெற்றோரால் தவறுதலாக இந்த துப்பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாணவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
