
பௌத்த பிக்குவை தாக்கி பணப்பை கொள்ளை
சிலாபம் பகுதியில் பௌத்த பிக்குவை தாக்கி அவரிடமிருந்த பணத்தினை கொள்ளையிட்ட நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சிலாபம் பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இத்தாலிக்கு செல்லத் தயாராகவிருந்த பௌத்த பிக்குவிடம் நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கையிலிருந்த112 யூரோக்கள் மற்றும் 7 இலட்சம் ரூபா இலங்கைப் பணம் அடங்கிய சூட்கேஸை பறித்து சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலுக்கு இலக்கான தேரர் இத்தாலியில் வசிப்பதாகவும், இலங்கைக்கு விஜயம் செய்துவிட்டு மீண்டும் இத்தாலி செல்லவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
