போலி விசாக்களுடன் பங்களாதேஷ் பிரஜைகள் கைது

போலி குடியுரிமை விசாக்களுடன் கிரேக்கத்திற்குச் செல்ல முயன்ற பங்காளதேஷ் பிரஜைகள் மூவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஹ்ரைனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்படவிருந்த விமானத்தில் செல்ல முயன்றபோது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 23 மற்றும் 25 வயதுடைய பெண்களாவர்.

கிரேக்க குடியுரிமை விசாக்கள் குறித்து சந்தேகமடைந்த அதிகாரிகள் மேலும் விசாரணைகளுக்காக குடிவரவுத்துறை எல்லை கண்காணிப்பு பிரிவிடம் சந்தேக நபர்களைஒப்படைத்தனர்.