போலி கடவுச்சீட்டு தயாரித்த மூவர் கைது!

நாட்டில் இருந்து குற்றவாளிகள் தப்பியோடும் வகையில், போலியான கடவுச்சீட்டுகளை தயாரித்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரில் இருவர் கடவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய போலி கடவுச்சீட்டு, விமானச் சீட்டை தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்றக் குற்றஞ்சாட்டில் மற்றுமொருவர் ஹோமகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 10 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் நீதிமன்ற உத்தரவின் பேரில், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்