போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம் – பொதுமக்கள் அவதானம்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் பல குறுஞ்செய்திகள் சமூக ஊடகங்கள் மூலம் பரவுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனர்த்த நிவாரணத்திற்கான தரவு சேகரிப்புப் பணிகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட கள அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர்கள் மூலம் முறையான விதத்தில் மேற்கொண்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் இவ்வாறான போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம் என்றும், அத்தகைய தரப்பினருடன் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது