போர் முடிந்ததும் பதவி விலகுவேன் – செலன்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதியாக இருக்கும் செலன்ஸ்கி, ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வந்ததும் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும்.

இருப்பினும் ரஷ்ய போர் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷியா முழு அளவில் உக்ரைன் மீது போர் தொடுத்தது.

“ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டால் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வேன். ஏனென்றால், தேர்தல் எனது இலக்கு அல்ல. மிகவும் கடினமான காலகட்டத்தில், என் நாட்டுடன் இருக்க வேண்டும், என் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். போர் முடிவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய இலக்கு” என செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.