போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை அரவணைக்க வேண்டும்

-யாழ் நிருபர்-

போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும், என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினருக்கு அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை கட்சியின் அமைப்பாளர், பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே  மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சூம் (Zoom) ஊடாக கலந்துரையாடிய கட்சியின் செயலாளர் நாயகம், பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், மக்கள் எதிர்கொள்ளுகின்ற இடர்களை துடைப்பதை பிரதான நோக்கமாக கொண்டு செயற்படுகின்ற கட்சி என்ற அடிப்படையில் அதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும், எனவும் தெரிவித்தார்.

மேலும், வன்முறைகளின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என்ற எமது நம்பிக்கையை போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும், என்றும் தெரிவித்தார்.