போராட்டத்தின்போது சுகவீனமுற்றவருக்கு நீர் பருக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!
-யாழ் நிருபர்-
போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது வயோதிப பெண் ஒருவர் சுகவீனமுற்றார்.
இதன்போது, உதவி பொலிஸ் பரிசோதகர் இஷானி சுலோசனா குறித்த தாயாருக்கு குடிநீர் வழங்கியுள்ளார்.
இச்சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்