
போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு பேர் கைது
இந்தியாவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் பொலிஸார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரிடம் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணையில் சட்டவிரோத விற்பனைக்காக போதை மாத்திரையை அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
