போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

சந்தேக நபரிடமிருந்து 09 அட்டைகளில் 90 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் மீட்கப்பட்ட மாத்திரைகளையும், கைது செய்யப்பட்ட நபரையும் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.