போதை பொருள் பாவனையால் சீரழியும் மாணவர்கள்
வளர்ந்து வரும் நவீன உலகில் மனிதர்கள் பல்வேறு வகையில் பரிணாமமடைந்து வருகின்றார்கள் அந்தவகையில் இந்த நவீன வளர்ச்சியானது நல்ல முறையிலும் வளர்ந்து வருகின்றது தீய முறையிலும் வளர்ந்து வருகின்றமையை கண்கூடாக காணமுடிகின்றது. இன்றைய சூழலை எடுத்துக் கொண்டால் இன்று பலரும் போதைக்கு மயங்கி தம்முடைய வாழ்க்கையினையே இழந்து கொண்டிருக்கின்றார்கள்.
அந்தவகையில் மது போதை, மாது போதை என்ற 2 போதையும் நாம் அறிந்ததே. இவ்விரு போதையை விடவும் இன்னும் சில போதைகள் உலக அளவில் பரவிக்கொண்டிப்பதை நாம் அறிவோமா? அத்தகைய போதைப் பொருள் பாவனை இன்றைய சமூகத்திற்கு எவ்வாறான அச்சுறுத்தலுடையதாக காணப்படுகின்றது என்பதைத் தான் இக்கட்டுரையில் நோக்கவுள்ளோம்.
போதைப் பொருள் பாவனையில் மாணவர்கள் எந்தளவு ஆர்வத்தை காட்டி வருகின்றார்கள் என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரையாகத்தான இக்கட்டுரை அமைந்துள்ளது.
அந்தவகையில் மாணவர்கள் இந்த போதைப் பொருள் பாவனையில் எந்தளவுக்கு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும், அதற்கான காரணங்கள், தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது. கல்வி கற்கும் ஒரு மாணவனுக்கு கல்வி என்பது விலை மதிக்க முடியாத ஒரு விடயமாகவே உள்ளது. பல கனவுகளை சுமந்த வண்ணம் பாடசாலையில் தமது பிள்ளைகளை விடுகின்றார்கள் அவ்வாறே அந்த மாணவர்களும் தம்முடைய இலட்சியம் மற்றும் இலக்கு குறித்து பாடசாலை சென்று பட்டப் படிப்பு வரை அவர்களது பயணம் நீள்கின்றது.
இவ்வாறாக கனவுகளை சுமந்த வண்ணம் செல்லும் இந்த மாணவர்களின் எதிர்காலமானது, போதைப் பொருள் பாவனைக்குள் சிக்குண்டு சீரழிவதனைக் காணக்கூடியதாக உள்ளது எனலாம். துற்போது பாடசாலை சூழலில் வியாபார நோக்கத்திறகாக மாணர்களிடையே போதைப் பொருள் பாவனையானது தீவிரமாக வளர்ந்து வருவதனை அவதானிக்கலாம்.
சாதாரண பேனாவில் தொடங்கி விரும்பி உண்ணும் ஐஸ்கிறீம் வகைகளில் இவ்வாறான போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இது தொடர்பில் பெற்றோரகள் மற்றும் பாடசாலை துறை மற்றும் மாணவர்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமானதாகும். இவ்வாறான போதைப் பொருளினை பாவிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது எனலாம். இவ்வாறான பாவனைக்கு மாணவர்கள் உள்ளாக்கப்படுவதற்கான காரணிகள் பல உள்ளன. அந்தவகையில் அவற்றுள் முக்கிய சில காரணிகள் பற்றி அவதானிக்கையில்
1. வீட்டுச் சூழல்
2. சமூகச் சூழல்
3. சுற்றுப்புற பழக்கவழக்கங்கள்
வீடுகளில் கல்வி கற்கும் மாணவர்களினுடைய கல்வி நடவடிக்கைகளை சரிவர பேண முடியாத நிலையில் வீடுகளின் சூழ்நிலை காணப்படுகின்றது. வீட்டில் பெற்றோரிடையே ஏற்படுகின்ற சண்டை, தகராறு, தேவையில்லாத வாரத்தைப் பிரயோகம் போன்ற காரணிகளால் மாணவர்கள் மன உளைச்சளுக்கு உள்ளாகின்றதோடு கல்வியை சரிவர கற்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப் படுகின்றார்கள். இதனால் இவர்கள் பொதைப் பழக்கத்திற்து உள்ளாகின்றார்கள். மேலும் வீட்டில் சரியான பாதுகாப்பு மற்றும் நல்லுறவு பேணப்படாத பட்சத்தில் மாணவர்கள் போதை பொருள் பாவனைக்கு உள்ளாகின்ற நிலமை ஏற்படுகின்றது.
சமூகச் சூழல்
சமூகத்தில் ஏற்படுகின்ற சில தவறான நபருடனான பழக்க வழக்கங்கள், சமூகத்தினரால் இழைக்கப்படுகின்ற சில அநீதியான செயற்பாடுகளினால் ஏற்படுகின்ற தாக்கங்கள் கூட இத்தகைய மாணவர்களை போதைப் பொருள் பாவனைக்குள் தள்ளி விடுகின்றது. முக்கியமாக கூற போனால் சமூக ஊடகங்களின் அதிகரித்த பாவனை, பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்த தொலைபேசிப் பாவனை, தொலைபேசியினூடாக சமூக வளைத் தளங்களினூடாக பரப்பப்படும் போதைபொருள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றால் மாணவர்களிடையே ஏற்படும் ஆர்வம் மற்றும் ஈடுபாடு போன்றவையும் ஒரு வகையில் காரணமாகின்றது. மேலும் சமூகத்தினரால் தனிமைப்படுத்தப்படுகின்ற போதும் இத்தகைய போதைப் பொருள் பாவனையில் மாணவ சமூகம் ஈடுபடுகின்றமையையும் ஒரு காரணியாகும்.
சுற்றுப்புற பழக்கவழக்கங்கள்
குறிப்பாக தகாத நட்பு வட்டாரங்களை சேர்த்து கொள்வதன் வாயிலாக போதைப் பொருள் பாவனைக்குள் மாணவர்கள் சேர்க்கப்டுகின்றார்கள். அத்தோடு அறியாத நபரிடம் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணுதல், தெரியாத நபரிடம் பொருட்களைப் பெற்றுக் கொண்டு பிறிதொரு நபரின் கைகளில் ஒப்படைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றினாலும் கூட போதைப் பொருள்பாவனைக்குள் உள்வாங்கப்படுகின்றார்கள். மற்றும் வீதியோரங்களில் விற்கப்படுகின்ற பொருட்களை வாங்கி உண்ணுதல் போன்றவையும் அடங்குகின்றன.
இத்தகைய போதைப் பொருள் பாவனையினை குறைத்து மாணவர்களின் எதிகாலத்தை காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருத்தரினுடைய பொறுப்பும் கடமையாகும். அந்த வகையில் சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
வீட்டுச் சூழ்நிலையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை கற்கும் மாணவர்களுக்கு முன்னிலையில் வெளிக் காட்டவோ அவர்களது கல்வி நடவடிக்கைகளை பாதிக்குத் வண்ணம் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது. பாடசாலை முடிந்து வரும் வேளையில் தம்முடைய பிள்ளைகளிடம் பாடசாலையில் நடந்தவற்றையும், பாடசாலை மற்றும் வெளிக்கள செயற்பாடுகள் பற்றியும் பேச வேண்டும், மற்றும் உணவுப்பொருட்கள் விடயத்தில் வீட்டில் தயாரித்த உணவுகளையே மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். பிள்ளைகளிடம் பொதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனைப் பற்றிய தெளிவினைக் கூறவேண்டும்.
நட்பு வட்டாரம் எனும் போது சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், தெரியாத புது முகத்தினருடனான பேச்சுவார்த்தை மற்றும் பொருள் கொடுக்கல் வாங்கல் போன்ற விடயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். சமூகமானது ஒருவரைத் தனிமையில் விடுதல் மற்றும் ஒதுக்குதல் போன்ற விடயங்களில் ஈடுபடுலதைத் தவிர்க்க வேண்டும். சமூக வலைத் தளப் பாவனைகளைத் தவிர்க்க வேண்டும் பாடசாலை சமூகம் மற்றும் வீட்டார் மாணவர்களின் தொலைபேசிப் பாவனையை கண்காணிக்க வேண்டும்.
மாணவர்கள் பாவிக்கும் பேனா உட்பட மற்றும் வீதியோரங்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்கள் குறித்து விஷேட கவனம் வெலுத்த வேண்டியது பாடசாலை மற்றும் சமூகத்தினுடைய பொறுப்பாகும்.
ஆகவே எதிர்காலத்தின் சுவர்களாக திகழ்பவர்கள் இன்றைய மாணவர்களே பற்பல கனவுகளைச் சுமந்து பாடசாலை க்கு செல்லும் மாணாக்கர்களை பாதுகாக்க வேண்டும். போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு ஊட்ட வேண்டும். சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க வழி செய்வோம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்