போதை ஒழிப்பு தொடர்பில் குச்சவெளி பள்ளிவாயல்கள் பிரதிநிதிகளுடன் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திப்பு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரதேச பள்ளிவாயல் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கிடையில் போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல், நேற்று வெள்ளிக்கிழமை மாலை குச்சவெளி அஷ்ரபியா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்றது.

ஜனாதிபதியியின் போதை ஒழிப்பு திட்டத்துக்கு அமைய, குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் யூசூப் ரஹ்மான் உட்பட குறித்த பகுதியின் ஏழு பள்ளிவாயல்களின் தலைவர், செயலாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.

போதை ஒழிப்பு திட்டத்துக்கு பூரண ஆதரவை தந்து, பிரதேசத்துக்கும் நாட்டுக்கும் போதையற்ற தேசமாக மாற்றுவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக, பள்ளிவாயல்களின் சார்பாக தெரிவித்தனர்.