போதையில் பௌத்த பிக்கு: மரத்தில் கட்டி வைத்த மக்கள்

அனுராதபுரம் பகுதியில் மது போதையில் குழப்பம் விளைவித்து ஒருவரை தாக்கிய பௌத்த பிக்குவை பிரதேச மக்கள் மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர்.

குறித்த பிக்குவை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் குறித்த பௌத்த பிக்குவை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.