
போதையில் அரச உத்தியோகத்தர் அட்டகாசம்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் மது போதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் ஊர்காவற்துறை- காரைநகர் பாதையில் நேற்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.
கடல் பாதையில் செல்லும் போது போதையில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் ஒருவர் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பிரதேச செயலகம் மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் பெண்கள் உட்பட பலரும் பாதையில் பயணத்தில் ஈடுபட்டபோது குறித்த சம்பவம் இடம்பெற்றமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
இதனையடுத்து பயணிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குறித்த நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
