போதைப் பொருள் பயன்படுத்தி பேரூந்து செலுத்திய சாரதிகள் கைது

போதைப்பொருள் பயன்படுத்தி பேரூந்து செலுத்திய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷ போதைப் பொருள் பயன்படுத்தி பேரூந்து செலுத்துவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 15 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்தை மையப்படுத்தி இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் போது 775 பேரூந்துகளின் சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்