போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாபுத்கமுவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரியளவிலான போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சஜீ என்பவரின் உதவியாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருளுடன் 40,000 ரூபாவுக்கும் அதிகமான பணமும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்