போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பலசரக்குகடை உரிமையாளர்!

-யாழ் நிருபர்-

யாழ்பாணம் – இணுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளர் போதைபொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்பொழுது, தான் போதை குழுசை பாவிப்பதாகவும், தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.

அவருடை கடையின் பின் பகுதியில் பல போதை குழுசைகளும், வெற்று கவர்களும் இருந்தன.

இந்நிலையில் பொலிசார் அவரை கைது செய்தனர்.

லேதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.