போதைப் பொருளுக்கு எதிராக மஸ்கெலியா சமன் எலிய மத்திய வித்தியாலய மாணவர்களின் வீதி நாடகம்
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா சமன் எலிய மத்திய வித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் பாவனை புகைத்தல், மதுபானம் அருந்துதல், வெற்றிலை பாவனைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த வீதி நாடகம் நடத்தியுள்ளனர்.
இவ்வாறு மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விபரீதம் அதனால் ஏற்படும் குடும்ப தகராறு பற்றி வீதி நாடகத்தில் எடுத்து கூறினார்கள்.
இந்த வீதி நாடகத்தை அப் பகுதியில் உள்ள மக்கள் கண்டு களித்தனர்.

