
போதைப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு
-மூதூர் நிருபர்-
போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு நிகழ்வும், தலைமைத்துவ செயலமர்வும் திருகோணமலை – மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் அதிபர் தலைமையில் அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் அனுசரணையில் நடைபெற்றது.
இதற்கான முழுமையான ஏற்பாட்டை மூதூர் வலயக்கல்வித்திணைக்களம் செய்திருந்தது.
இதனடிப்படையில் உதவிக்கல்வி பணிப்பாளர் புண்ணியமூர்த்தி கருணாகரன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு நெறிப்படுத்தினர்.
வளவாராக ஆலய பிரதம செயற்பாட்டாளர் பொன் சற்சிவானந்தம் பங்கு பற்றி நடத்தினார்.
ஆலயத்தின் 14வது வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இது ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவர்கள் 6 குழுவாக பிரிந்து போதைப்பாவனை மற்றும் மனிதப்பண்பு தொடர்பாக விரிவாக ஆராய்ந்து குழு சமர்ப்பணங்களை வியக்கும் வகையில் முன்வைத்தார்கள்.
மறுபுறத்தில் சிறிய மாணவர்கள் தமது குரல் ஆற்றலை வெளிப்படுத்தினர்.


