போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞன் கைது

-பதுளை நிருபர்-

ஹியங்கனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, கனுபேத்த, வேவத்த பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்களை மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக போதை ஒழிப்பு பிரிவின் தலைமை அதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் ஜயசேகரவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்வதற்கு முகவர் ஒருவரை நியமித்து குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேகநபரிடம் இருந்து 540 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 20 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்