போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளை விற்ற பணத்துடன் சந்தேகநபர் கைது!

-பதுளை நிருபர்-

மஹியங்கனை பூஜா நகர் பகுதியில் 20,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் 380 போதை மாத்திரைகள் மற்றும் அவற்றை விற்பனை செய்து பெற்றதாக கூறப்படும் 1,18000 ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை புஜா நகரில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் பூஜா நகரில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு முன்பாக சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து போதைப்பொருள் பணம் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருள் பணம் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிவான் சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்