போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை -ஆனந்த விஜேபால
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்க சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (16) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அமைச்சர்
இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாளை (17) கல்விச் செயலாளர் ஊடாக இது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாகச் செயலாளர் ஊடாக நாளை வெளியிடப்படவுள்ளன.
அரசு சாரா நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவுவ ஜனாதிபதிச் செயலாளர் ஊடாக சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளருக்கு சுற்றறிக்கை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய நடவடிக்கைக்கு இணங்க, அரச நிறுவனங்களில் தேசிய நடவடிக்கைக் குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டத்துக்கு இணையாக இது மேற்கொள்ளப்படவுள்ளது.
